September 10, 2026

மது அருந்திவிட்டு அவமானப்படுத்திய கணவரை ஆத்திரத்தில் கொளுத்திகொலை செய்த மனைவி…

மதுபானம் அருந்திவிட்டு அவமானப்படுத்திய கணவரை ஆத்திரத்தில் கொளுத்திவிட்டு கொலை செய்த மனைவியின் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது

உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பதேபூர் மாவட்டம், தாராப்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் அவதேஷ் (வயது 49). இவன் மனைவி பிரீத்தி தேவி (வயது 45). தம்பதிகளுக்கு குழந்தை இல்லை.

மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்த அவதேஷ், நேற்று இரவில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, ரூ.100 பணம் குறித்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே, மனைவியை அவதேஷ் அவதூறாக பேசி அவமானப்படுத்தி இருக்கிறார்.

கணவரின் பேச்சால் ஆத்திரத்தில் இருந்த பிரீத்தி, கட்டிலில் உறங்கிக்கொண்டிருந்த கணவரின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். நள்ளிரவு நேரத்தில் வீட்டில் இருந்து கரும்புகை வந்ததை அக்கம் பக்கத்தினர் கண்டுள்ளனர்.

தகவலை அறிந்து நேரில் வந்த அதிகாரிகள் அவதேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில் பிரீத்தி உண்மையை ஒப்புக்கொள்ளவே, அதிகாரிகள் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

You may have missed