கிணத்துக்கடவு ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டான நிலையில் வாலிபரின் சடலம்… 

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தடாகம், மடத்தூர் பகுதியில் வசித்து வருபவர் பிரவீன் (வயது 24). இவர் போட்டோகிராபர் ஆவா. கடந்த ஜூலை 02ம் தேதி புதிய போட்டோ ஆர்டர் ஒன்று வந்திருப்பதாக ஒட்டன்சத்திரம் சென்றவர் பின் வீட்டுக்கு வரவில்லை. இதனால் தடாகம் காவல் நிலையத்தில் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். 

விசாரணையின்போதே, கிணத்துக்கடவு ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டான நிலையில் வாலிபரின் சடலம் மீட்கப்பட்டது. இதுகுறித்து போத்தனூர் ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, அவர் மாயமான பிரவீன் என்பது உறுதி செய்யப்பட்டது. அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை முன்னெடுக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கைக்காக அதிகாரிகள் காத்திருந்தனர்.

ஆனால், இவ்வழக்கில் யாரும் எதிர்பாராத விதமாக கரூரைச் சேர்ந்த மனோஜ் குமார் (வயது 26), அவரின் நண்பர் கார்த்திகேயன் (வயது 26) ஆகியோர் பிரவீனை கொலை செய்து தண்டவாளத்தில் வீசியதாக கரூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களிடம் நடந்த விசாரணையில் திடுக்கிடும் திருப்பம் வெளியானது. அதாவது, கரூரைச் சேர்ந்த மனோஜும், கோவையில் உள்ள சாயிபாபா காலனியில் வசித்து வரும் பெண்ணும் 4 ஆண்டுகளாக இன்ஸ்டகிராமில் பழகி காதலித்து வந்துள்ளனர்.

இந்த பெண்மணி போட்டோகிராபர் ப்ரவீனுடமும் பழகி வந்த நிலையில், பிப்ரவரி மாதம் இதுகுறித்த தகவல் மனோஜுக்கு தெரியவந்துள்ளது. இவர்களின் காதலுக்கு பிரவீன் இடையூறாக இருப்பதாக நினைத்த மனோஜ், இன்ஸ்டகிராம் ஐடியை கண்டுபிடித்து இருக்கிறார். பின் ஒட்டன்சத்திரத்தில் போட்டோஷூட் என வரவழைத்து இருக்கிறார். இரவு நேரத்தில் வந்த பிரவீனிடம், காலை போட்டோசூட் என கூறி தங்கவைத்துள்ளார். பின் திட்டப்படி ப்ரவீனுக்கு மதுவை ஊற்றிவிட்டு போதை தலைக்கேறிய நிலையில் அவரை வெளியே அழைத்துச் சென்று இருவரும் கழுத்தை கயிறால் நெரித்து கொலை செய்துள்ளனர்

கொலைக்குப்பின் தற்கொலை நாடகம் போல காண்பிக்க உடல் தண்டவாளத்தில் வீசப்பட்டுள்ளது. பின் அவ்வழியே வந்த ரயில் எறியதில் தலை துண்டிக்கப்பட்டுள்ளது. கொலை சம்பவம் உறுதியானதைத்தொடர்ந்து குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.