இலவச தங்கம்.. ₹30,000 உதவித்தொகை! விஜய்யின் ‘தவெக’ தேர்தல் அறிக்கையில் அதிரடி சரவெடி – முழு விபரம் !”
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முழுமையான தேர்தல் அறிக்கை இன்று (ஏப்ரல் 16, 2026) வெளியாகிறது.
ஏற்கனவே முதற்கட்டமாக மகளிர் மற்றும் நெசவாளர்களுக்கான சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருந்த விஜய், இன்று கட்சியின் ஒட்டுமொத்த தொலைநோக்குத் திட்டங்கள் மற்றும் ஆட்சிக்கு வந்தால் செயல்படுத்தப்போகும் திட்டங்கள் குறித்து விரிவான அறிக்கையை வெளியிட உள்ளார்.
எதிர்பார்க்கப்படும் முக்கிய அம்சங்கள்:
- நெசவாளர்கள் நலன்: கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் ₹30,000 வங்கி கணக்கில் வரவு வைப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 500 முதல் 1500 யூனிட் வரை இலவச மின்சாரம் குறித்த அறிவிப்பு இதில் உறுதி செய்யப்படும் எனத் தெரிகிறது.
- கல்வி மற்றும் வேலைவாய்ப்பு: தமிழக மாணவர்களுக்கு கல்விக்கடன் தள்ளுபடி மற்றும் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை போன்ற இளைஞர்களைக் கவரும் அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
- மகளிர் நலன்: ஏழை எளிய வீட்டுப் பெண்களுக்கு திருமண உதவித்தொகையாக தங்கக் காசு மற்றும் பட்டுப்புடவை, பிறந்த குழந்தைகளுக்கு ‘வெல்கம் கிட்’ உள்ளிட்ட மகளிர் மையப்படுத்தப்பட்ட திட்டங்கள் அறிக்கையில் முக்கியத்துவம் பெறும்.
- ஊழலற்ற நிர்வாகம்: அரசு ஊழியர்கள் இடமாற்றம் மற்றும் பதவி உயர்வுகளில் வெளிப்படைத்தன்மை, லஞ்சமற்ற நிர்வாகம் குறித்த அதிரடி வாக்குறுதிகளை விஜய் முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் களம்:
வருகின்ற ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனித்து களம் காண்கிறது. கட்சித் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதால், இந்தத் தேர்தல் அறிக்கை அவரது அரசியல் பயணத்தில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.
கட்சியின் கொள்கைகளான மதச்சார்பற்ற சமூக நீதி மற்றும் சமத்துவத்தை முன்னிறுத்தி இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்

More Stories
“20 ஆண்டுகளாக திமுக கூட்டணியில் இருந்தபோதும் நான் நினைத்த பல விஷயங்களைச் சாதிக்க முடியவில்லை-திருமாவளவன்
“அமைச்சர் பதவிக்காக தவெகவுக்கு சென்றோருக்கு விஜய் கொடுத்தது அல்வா” – பழனிசாமி…
“முதலமைச்சர் விஜய் சர்வாதிகாரப் போக்கை உடனடியாக கைவிட வேண்டும்…” – டிடிவி தினகரன்