லாரி கடத்தல்.. குண்டர் சட்டம்.. ஸ்டெர்லைட் மெளனம்! சி.த.செல்லபாண்டியனின் அரசியலை அசைத்துப் பார்த்த 5 பகீர் சர்ச்சைகள்!
தூத்துக்குடி: ஒரு காலத்தில் அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த தூத்துக்குடி அதிமுக முகமான சி.த. செல்லபாண்டியன், தற்போது மீண்டும் 2026 தேர்தல் களத்தில் நிற்கிறார். ஆனால், அவர் மீது படிந்துள்ள கறைகளும், குறிப்பாக அவரது மகன் சம்பந்தப்பட்ட அந்த ‘முந்திரி லாரி’ சம்பவமும் அவருக்குப் பெரும் முட்டுக்கட்டையாக மாறியுள்ளது. இது குறித்த பிரத்யேக ரிப்போர்ட்!
சினிமா பாணியில் முந்திரி லாரி கடத்தல்: சிக்கிய சி.த.செல்லபாண்டியன் மகன்!
செல்லபாண்டியனின் அரசியல் வாழ்க்கையில் பலத்த அடியைக் கொடுத்தது அவரது மகன் ஞானராஜ் ஜெபசிங் சம்பந்தப்பட்ட வழக்குதான்
சம்பவம் ?:
2021-ம் ஆண்டு நவம்பர் மாதம், கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரிலிருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு சுமார் 1.10 கோடி ரூபாய் மதிப்புள்ள 16 டன் முந்திரி பாரம் ஏற்றிய கன்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது.
ஹைஜாக் :
பொட்டலூர் ஆணி விலக்கு அருகே காரில் வந்த மர்ம கும்பல், லாரி ஓட்டுநரைத் தாக்கிவிட்டு, சினிமா பாணியில் லாரியை கடத்திச் சென்றனர்.

கைது :
லாரி உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில், ஜிபிஎஸ் (GPS) கருவி மூலம் லாரியைத் தேடிய போலீசார், நாமக்கல் அருகே மடக்கிப் பிடித்தனர். இதில் செல்லபாண்டியனின் மகன் ஞானராஜ் ஜெபசிங் தான் இந்தத் திட்டத்தின் “மாஸ்டர் மைண்ட்” என்பது அம்பலமானது.
குண்டர் சட்டம்:
இந்தச் சம்பவத்தில் மூளையாகச் செயல்பட்டதற்காகவும், தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காகவும் ஞானராஜ் ஜெபசிங் மீது குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறை நடவடிக்கை எடுத்தது.

மக்கள் அதிருப்தி:
அமைச்சராக இருந்தவர் தன் குடும்பத்தையே கட்டுக்கோப்பாக வைத்திருக்கவில்லை, மகனே வழிப்பறி வழக்கில் குண்டர் சட்டத்தில் கைதானது இந்தத் தொகுதி மக்களிடையே மிகப்பெரிய அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது” என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
ஸ்டெர்லைட் விவகாரம்:
துப்பாக்கிச் சூடும்… அமைச்சரின் மெளனமும்!
- தூத்துக்குடி வரலாற்றில் கருப்பு தினமாகக் கருதப்படும் 13 பேர் பலியான துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது, செல்லபாண்டியன் ஆளும் கட்சியில் அமைச்சராக இருந்தார்.
- மக்களின் குற்றச்சாட்டு: “எங்கள் மண்ணின் பிள்ளைகள் வீதியில் விழுந்து கிடந்தபோது, அமைச்சர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களுக்காக அவர் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. இப்போது ஓட்டுக்காக மட்டும் மக்கள் வேண்டுமா?” என மீனவ மற்றும் கிராமப்புற பகுதிகளில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது.
- குடிநீர் தட்டுப்பாடு: 10 முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே விநியோகம்.பாதாள சாக்கடை திட்டம்: முறையாகத் திட்டமிடாததால் பல இடங்களில் கழிவுநீர் சாலைகளில் ஓடியது.நிர்வாக மெத்தனம்: மாநகராட்சியில் அடிப்படை வசதிகளுக்காக மக்கள் பலமுறை போராட்டம் நடத்தியும், அமைச்சராக இருந்த அவர் அதில் ஆர்வம் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு இன்றும் நிலவுகிறது.

More Stories
நாகர்கோவிலில் இன்று பிரம்மாண்ட ரோட் ஷோ: பிரதமர் மோடி
ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் கைது: விசைப்படகும் பறிமுதல்!
பழனியில் தமிழக வெற்றி கழகத்தின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்