September 10, 2026

துப்பாக்கியுடன் ரீல்ஸ்: வலைதளங்களில் வைரலால் சர்ச்சை

  திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே வத்தக்கவுண்டன்வலசு கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (27). ஊர்க்காவல் படைவீரர். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாலசமுத்திரம் கிராமத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். இவர் துப்பாக்கியுடன் நிற்பது போல் வீடியோ மற்றும் போட்டோ எடுத்து ரீல்ஸ் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

ஊர்க்காவல் படைவீரர் துப்பாக்கியை கையாண்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, துப்பாக்கியை கொடுத்த சிஆர்பிஎப் வீரர், ராஜ்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தி துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமென காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You may have missed