சென்னை புளியந்தோப்பு துணை கமிஷனர் முத்துக்குமாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, தனிப்படை எஸ்ஐ ராஜ்கிரண் தலைமையிலான போலீசார் நேற்று இரவு புளியந்தோப்பு 5வது தெரு ஜங்ஷன் பகுதியில் சோதனை நடத்தி 1026 மது பாட்டில்கள் மற்றும் 60 பீர்பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
புளியந்தோப்பு மாராத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்த புஷ்பா (72) என்ற சரித்திர பதிவேடு ரவுடி ஆட்களை வைத்து வியாபாரம் செய்துவந்தது தெரியவந்தது. புஷ்பா மீது ஏற்கனவே 25 குற்ற வழக்குகள் உள்ளன. இவர் சில மது பாட்டில்களை வேறிடத்தில் வைத்துள்ளார் என்று போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் பேசின்பிரிட்ஜ் போலீசாரை வரவழைத்து புஷ்பாவை அவரிடம் ஒப்படைத்துவிட்டு தனிப்படை போலீசார் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
இரவு நேரம் என்பதால் புஷ்பாவை காலை காவல் நிலையத்திற்கு வரும்படி கூறி பேசின்பிரிட்ஜ் போலீசார் பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களை காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றனர். காலை புஷ்பா காவல் நிலையத்திற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தலைமறைவாகிவிட்டார். அவருடன் சேர்ந்து மது விற்பனையில் ஈடுபட்ட நபர்களும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

More Stories
திருப்பரங்குன்றம் பாமக ஒன்றிய செயலாளர் தாயார் தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு கைது செய்யாத ஆஸ்டின்பட்டி போலீசார் தெய்வம் தரப்பில் குற்றம் சாட்டு!
சென்னை மாநகராட்சியில் ரூ. 284 கோடி மதிப்புள்ள 35 டெண்டர்கள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஒரகடத்தில் உள்ள முக்கியத் தனியார் தொழிற்சாலைகளில் முதல்-அமைச்சர் ஆய்வு