தமிழ்நாட்டில் பெண்களின் பொருளாதார சுதந்திரம் மற்றும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில், மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து சேவையான ‘வெற்றிப் பயணம்’ திட்டம் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இத்திக்கத்தை மாண்புமிகு முதலமைச்சர் மு.க. விஜய் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கிறார்.
ஏற்கனவே நகரப் பகுதிகளில் உள்ள சாதாரண மற்றும் மலைப்பகுதி பேருந்துகளில் நடைமுறையில் இருந்த இத்திட்டம், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தற்போது மாநகரம், நகர்ப்புற எக்ஸ்பிரஸ் (Express), எல்.எஸ்.எஸ் (LSS) மற்றும் டீலக்ஸ் (Deluxe) அரசுப் பேருந்துகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்படும் புறநகர் சாதாரண கட்டணப் பேருந்துகளிலும் பெண்கள் எவ்விதக் கட்டணமுமின்றிப் பயணிக்கலாம்.
இத்திட்டம் மூலம் மாணவிகள் தொலைதூரக் கல்லூரிகளுக்கும், வேலைக்குச் செல்லும் பெண்கள் மற்றும் தாய்மார்கள் எவ்வித வருமான உச்சவரம்பு மற்றும் பயண எண்ணிக்கைக் கட்டுப்பாடுகளும் இன்றிப் பயனடையலாம். பெண்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டைக் குறிக்கோளாகக் கொண்டுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்தின் மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் தோராயமாக ரூ. 6,000 கோடி கூடுதல் நிதிச் செலவினம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
காந்தி ஜெயந்தி நாளான இன்று தொடங்கும் இத்திட்டம், தமிழகப் பெண்மணிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

More Stories
மதுரையில் எம்.எல்.ஏ வருகைக்காக 2½ மணி நேரம் காத்திருந்த தொண்டர்கள்! போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி!
தவெகவுக்கு முழு ஆதரவு! பிராமணர் சங்கம் அதிரடி அறிவிப்பு – தமிழக அரசியலில் பரபரப்பு!
டாஸ்மாக் கடைகளில் பணம் செலுத்த புதிய கட்டுப்பாடு! நவம்பர் 1 முதல் அதிரடி மாற்றம்!