சென்னை: 2027-ம் ஆண்டுக்கான மத்திய தேர்வாணைய குடிமைப் பணிகளுக்கான (UPSC Civil Services) முதல்நிலைத் தேர்வுப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை இன்று (அக்டோபர் 14) தொடங்குகிறது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் விவரம்:
மதிப்பெண் பட்டியல் வெளியீடு: மத்திய தேர்வாணைய குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வுப் பயிற்சிக்கான, தமிழ்நாடு அரசின் யு.பி.எஸ்.சி. முதல்நிலைத் தேர்வுக்கான ஊக்கத்தொகை திட்ட மதிப்பீட்டுத் தேர்வு வெற்றி பெற்றவர்களின் முழுமையான மதிப்பெண் பட்டியல், அகில இந்திய குடிமைப் பணி தேர்வுப் பயிற்சி மையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ([www.civilservicecoaching.com](https://www.civilservicecoaching.com)) வெளியிடப்பட்டுள்ளது.
இடங்கள் விவரம்:
இந்த மதிப்பெண் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களில் இருந்து:
- சென்னை முழு நேரப் பயிற்சி: 225 நபர்கள்
- சென்னை பகுதி நேரப் பயிற்சி: 100 நபர்கள்
- மதுரை முழுநேரப் பயிற்சி: 100 நபர்கள்
- கோவை முழுநேரப் பயிற்சி: 100 நபர்கள்
என மொத்தம் 525 நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தரவரிசை மற்றும் இடஒதுக்கீட்டு விதிகளின்படி கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
முக்கிய தேதிகள் விவரம்:
- விண்ணப்பப் பதிவு தொடங்கும் நாள்: அக்டோபர் 14 (இன்று)
- விண்ணப்பிக்கக் கடைசி நாள்: அக்டோபர் 20
- முதற்கட்ட தெரிவு பட்டியல் வெளியீடு: அக்டோபர் 22
- கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு: அக்டோபர் 25 முதல் 27 வரை(சென்னை அடையார் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அகில இந்திய குடிமைப்பணி தேர்வுப் பயிற்சி மையத்தில் மட்டுமே கலந்தாய்வு நடைபெறும்)
- பயிற்சி வகுப்புகள் தொடக்கம்: அக்டோபர் 28
தகுதியும் ஆர்வமும் உள்ள தேர்வர்கள் காலக்கெடுவிற்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

More Stories
மதுரையில் எம்.எல்.ஏ வருகைக்காக 2½ மணி நேரம் காத்திருந்த தொண்டர்கள்! போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி!
தவெகவுக்கு முழு ஆதரவு! பிராமணர் சங்கம் அதிரடி அறிவிப்பு – தமிழக அரசியலில் பரபரப்பு!
டாஸ்மாக் கடைகளில் பணம் செலுத்த புதிய கட்டுப்பாடு! நவம்பர் 1 முதல் அதிரடி மாற்றம்!