சென்னை ஐஐடியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் விஜய் பங்கேற்ற அரசு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்நிலையில், நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு அமைச்சர் வெங்கட்ரமணன் மற்றும் நடிகை கஸ்தூரி ஆகியோர் நெருக்கமாக நின்று கைபிடித்தபடி தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்த காட்சிகள் வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடியின் அரசு நலத்திட்டங்கள் தொடக்க விழாவில், தமிழக த.வெ.க அமைச்சர் வெங்கடரமணனுடன் நடிகையும் பாஜக நிர்வாகியுமான கஸ்தூரி தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிப் பெரும் விவாதத்தைக் கிளப்பியது.
சமீபத்தில் தவெக மற்றும் தமிழக அரசியல் சூழல்கள், அரசின் செயல்பாடுகள் மற்றும் பொதுப் பிரச்சினைகள் குறித்து நடிகை கஸ்தூரி வெளிப்படையாகப் பேசிவரும்,, அமைச்சருடன் அவர் நேரில் சந்தித்து பேசியிருப்பது ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாக மாறியுள்ளது. குறிப்பாக, இந்த சந்திப்பின் பின்னணி என்ன என்பது குறித்த விபரங்களை அறிய அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அமைச்சர் வெங்கடரமணனுடன் தான் காதுக்கு அருகில் குசுகுசுவெனத் தீவிரமாகப் பேசியதாக வெளியான வீடியோக்களுக்குப் பதிலளித்த கஸ்தூரி, அது எந்தவொரு அரசியல் ரகசியமோ அல்லது தீவிர விவாதமோ கிடையாது என்று மறுத்துள்ளார். “அரங்கில் குளிர்சாதன வசதி மற்றும் இரைச்சல் அதிகமாக இருந்ததால், நான் பேசியது அவருக்குத் தெளிவாகக் கேட்க வேண்டும் என்பதற்காகவே மிக அருகில் சென்று காதருகே பேச வேண்டியதாயிற்று. மற்றபடி அது ஒரு சாதாரண நலம் விசாரிப்புதான்” என்று கஸ்தூரி தெளிவுபடுத்தியுள்ளார்.

More Stories
மதுரையில் எம்.எல்.ஏ வருகைக்காக 2½ மணி நேரம் காத்திருந்த தொண்டர்கள்! போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி!
தவெகவுக்கு முழு ஆதரவு! பிராமணர் சங்கம் அதிரடி அறிவிப்பு – தமிழக அரசியலில் பரபரப்பு!
டாஸ்மாக் கடைகளில் பணம் செலுத்த புதிய கட்டுப்பாடு! நவம்பர் 1 முதல் அதிரடி மாற்றம்!