பாலியல் வன்கொடுமை செய்த கூலித் தொழிலாளிக்கு தூக்குத் தண்டனை
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே மருதிப்பட்டியை சேர்ந்தவர் விறகு வெட்டும் தொழிலாளியான சந்திரன். இவர் மீது, கடந்த 2014 ஆம் ஆண்டு 5 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்துவந்தது.
வீட்டில் அவர்களுக்கு ஆபாச வீடியோக்களை காட்டி பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் தனது பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் அவர்கள் மகளிர் போலீஸில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் திருப்பத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி சந்திரனை கைது செய்தனர். மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு சிவகங்கை போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் நீதிபதி கோகுல் முருகன், குற்றவாளி சந்திரனுக்கு 5 மரண தண்டனை விதித்தார். அத்துடன் 4 ஆயுள் தண்டனை , 22 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தார். மேலும் தலா 7 லட்சம் ரூபாய் வீதம் ரூ 35 லட்சம் அபராதத்தை பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

More Stories
மதுரையை நோக்கி சீறிபாய்ந்து வரும் தண்ணீர்… கள்ளழகருக்காகத் திறக்கப்பட்ட வைகை…
இலவச மருந்துகள், இலவச மருத்துவ ஆலோசனை … பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள தனியார் மருத்துவமனை அழைப்பு…
சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில், போலீசாருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்ய உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மனு