மதுரை பிபி சாவடியில் இயங்கி வரும் பிரபல தனியார் மருத்துவமனையான விஜயராஜ் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இலவச மருத்துவ ஆலோசனை மற்றும் இலவச மருந்துகள் வழங்க ஏற்பாடு செய்துள்ளது. இந்த மருத்துவ முகாமில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு பொதுமக்களுக்கு அந்த தனியார் மருத்துவமனை அழைப்பு விடுத்துள்ளது.
வரும் ஞாயிறு 26 4 2026 அன்று காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மருத்துவ முகாம் நடத்த உள்ளது. இந்த மருத்துவ முகாமில் நெஞ்செரிச்சல், மேல் வயிற்று வலி, வயிறு உப்புசம், அதிக வாயுத்தொல்லை, புளித்த ஏப்பம், போன்ற பலபாதிப்புகளுக்கு இலவசமாக மருத்துவ ஆலோசனை வழங்க உள்ளனர். மேலும் உணவு ஆலோசனைகள், அல்சரை குணப்படுத்துவதும் உணவுகள் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றிய வழிகாட்டுதல்கள், ரத்தசோகை மற்றும் சர்க்கரை அளவு பரிசோதனை ஆகியவை முற்றிலும் இலவசமாக பார்த்துக் கொள்ளலாம். மேலும் சலுகை கட்டணத்தில் ஸ்கேன் 500 மற்றும் எண்டோஸ்கோபி 1500 மட்டும் செலுத்தி பார்த்துக் கொள்ள கொள்ளலாம். எனவே பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மருத்துவமனை நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

More Stories
பார்க்கில் சறுக்கு பலகை பெயர்ந்து விழுந்து 4 வயது சிறுமி பலி!
ஐந்து குழந்தைகள் பாலியல் வன்கொடுமை.. அரசு சார்பில் ரூ. 35 லட்சம் இழப்பீடு…
அதிகாலை 6 மணிக்கு வந்த இமெயில்…46,750 ஊழியர்கள் பணிநீக்கம்…மெட்டா, ஆரக்கிள் மற்றும் மைக்ரோசாஃப்ட் அதிரடி!.