விருதுநகர் :
தமிழக அரசியலில் அடுத்தடுத்த அதிரடி திருப்பங்களும், ஆடியோ-வீடியோ சர்ச்சைகளும் காட்டுத்தீ போலப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
விளாத்திகுளம் எம்.எல்.ஏ. சிறைவாசம்:
விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜி.வி. மார்க்கண்டேயன் எலும்பை உடைத்திடுவேன்னு பேசிய பேச்சு தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஒரு மக்கள் பிரதிநிதி மீது இத்தகைய நடவடிக்கை பாய்ந்தது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
த.வெ.க ராஜகுரு நீக்கம் – வெடித்த அதிரடி:
அதே வேளையில், “ராஜபாளையத்தில் லட்டு வழங்கியது யார்?” என்ற விவகாரம் தொடர்பாக லீக்கான தொலைபேசி உரையாடல் சர்ச்சையில், த.வெ.க ஒன்றிய செயலாளர் ராஜகுருவை கட்சியிலிருந்து நீக்கி தலைமையிடம் இருந்து உத்தரவு வெளியாகியுள்ளது.
மக்களின் பரவலான கேள்வி & ஆவேசம்:
தற்போது இந்த இரு சம்பவங்களையும் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் பொதுமக்கள் மற்றும் அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் மிகக் கடுமையான விவாதங்களும், கேள்விகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன:
இரட்டை அளவுகோலா?: பேசிய குற்றத்திற்காக திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் சிறைக்குச் செல்லும் போது, “தூக்கிவச்சி ஜட்டியோடு அடிச்சு கொன்னுடுவேன்” என அப்பட்டமாக ஆடியோவில் மிரட்டல் விடுத்த சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு மட்டும் பதவியில் நீடிப்பு தரப்படுவது எந்த வகையில் நியாயம்?
அமைச்சருக்கும் தண்டனை கிடைக்குமா?: தொண்டரையோ அல்லது நிர்வாகியையோ தண்டிப்பதோடு நிற்காமல், ஆவேசமாகப் பேசிய அமைச்சரையும் முதல்வர் தண்டிப்பதே உண்மையான ஜனநாயகத்திற்கும் நடுநிலைமைக்கும் அழகாகும் என இணையத்தில் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
த.வெ.க நிர்வாகி ராஜகுருவின் நீக்கம் மற்றும் அமைச்சரின் ஆடியோ விவகாரம் ஆகியவை தமிழக அரசியல் களத்தில் பெரும் சலசலப்பையும், முதல்வர் மற்றும் தமிழக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பையும் உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.

More Stories
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு – 4 முனை போட்டி தீவிரம்!
தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் புறப்படுகிறார் முதல்வர் விஜய்: பதவியேற்ற பின் முதல் வெளிநாட்டுப் பயணம்!
சாட்சியத்தை மட்டும் வைத்து மரண தண்டனை வழங்க முடியாது: போக்சோ வழக்கில் கைதானவரை விடுதலை செய்து மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!