பள்ளி மாணவர்களிடம் அமைச்சர் கீர்த்தனா நடந்து கொண்ட விதம் தொடர்பாக திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. முன்முடிவோடு அரசுப் பள்ளியில் ஆய்வு செய்த அமைச்சர் கீர்த்தனாவின் செயலுக்கு திமுக தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. அரசுப் பள்ளியில் ஆய்வு என்ற பெயரில் அவர் பள்ளி மாணவர்களை அவமானப்படுத்தியுள்ளார்.
அரசுப்பள்ளி மாணவியின் தன்னம்பிக்கையைத் தனது விளம்பர Reelsகாக Camera முன்னால் கேலி செய்து சங்கடப்படுத்திய அமைச்சர் கீர்த்தனாவின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. சொந்த அனுபவங்களை மறந்த அமைச்சரின் இந்த அதிகாரம் மிக்க மேட்டிமைத்தனம், தவெக-வின் விளம்பர வெறிக்காக எவரையும் பலி குடுக்க தயங்க மாட்டோம் என்ற சிந்தனையை அப்பட்டமாகக் காட்டுகிறது.
தேர்தலுக்கு முன்பும் சரி, தற்போதும் சரி, தங்கள் விளம்பர வெறிக்காகப் பிஞ்சு குழந்தைகளைப் பயன்படுத்தும் இத்தகைய பொறுப்பற்ற செயலைத் தவெகவும் அதன் தலைவரும் கைவிட வேண்டும். பதவி உயர்ந்தால் மட்டும் போதாது; உங்களுக்கும் உங்களோடு இருப்பவர்களுக்கும் மனமும் உயர்ந்திருக்க வேண்டும் Uncle! இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

More Stories
கிணத்துக்கடவு ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டான நிலையில் வாலிபரின் சடலம்…
மது அருந்திவிட்டு அவமானப்படுத்திய கணவரை ஆத்திரத்தில் கொளுத்திகொலை செய்த மனைவி…
பழநி-கொடைக்கானல் மலைச்சாலையில் மது அருந்தி தவெகவினர் அட்ராசிட்டி: