April 15, 2026

முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ காலமானார் : அரசியல் கட்சியினர் இரங்கல்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மூத்த நிர்வாகியையும், முன்னாள் எம்எல்ஏவுமான என் சுந்தரம் காலமானார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர் என்.சுந்தரம். கடந்த 1996 2001ல் மூப்பனார் தலைமையிலான த.மா.கா சார்பிலும், 2006 – 2011ல் காங்கிரஸ் கட்சியின் சார்பிலும் காரைக்குடி தொகுதி சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக என்.சுந்தரம் பொறுப்பு வகித்துள்ளார்.

தொடர்ந்து காங்கிரஸ் கட்சி உறுப்பினராக இருந்து வந்த சுந்தரம் மருத்துவ பரிசோதனைக்காக காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றபோது காரிலிருந்து கீழே இறங்கிய போது தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது மறைவுக்கு காங்கிரஸ் கட்சியினர் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.