September 10, 2026

ஒரு நாளைக்கு 2 முறை விலையேறும் தங்கம் : ரூ.15,000 தாண்டியது ஒரு கிராம் தங்கம்

தமிழகத்தில் ஒரு கிராம் தங்கம் இன்று 15 ஆயிரம் ரூபாயை தாண்டி உள்ளது. இது மக்களுடைய பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கிறது. அதிலும் கடந்த ஒரு வாரமாக இரண்டும் போட்டிப்போட்டு உயர்ந்து வருவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் சமீபநாட்களாக காலை மற்றும் பிற்பகல் என 2 நேரங்களில் விலை மாற்றம் இருந்து வருகிறது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை மேலும் அதிரடியாக உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது.

அதன்படி தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.2,200 உயர்ந்து, ஒரு சவரன் – 1 லட்சத்து 20 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. கிராமுக்கு ரூ.275 உயர்ந்து, ஒரு கிராம் – 15 ஆயிரத்து 25 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாயும் உயர்ந்து, ஒரு கிராம் 375 ரூபாய்க்கும், ஒரு கிலோ 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

You may have missed