புதுக்கோட்டை: தமிழக முதலமைச்சர் விஜய் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகளைக் காண்பதற்காக நீண்ட நேரமாகக் காத்திருந்த பள்ளி மாணவி ஒருவர் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டையில் இன்று (நவம்பர் 2) நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய் வருகை தந்துள்ளார். இதையொட்டி அவரைக் காண்பதற்காக சாலையோரங்களில் ஏராளமான பொதுமக்களும், பள்ளி மாணவ, மாணவிகளும் காத்திருந்தனர்.

இந்நிலையில், கூட்ட நெரிசல் மற்றும் வெயிலுக்கு மத்தியில் நீண்ட நேரமாகக் காத்திருந்த பள்ளி மாணவி ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார்.
இதனைப் பார்த்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் உடனடியாகச் செயல்பட்டு, மாணவியை மீட்டு முதலுதவி சிகிச்சை அளிப்பதற்காக அருகிலிருந்த மிதிவண்டி நிறுத்தும் இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
முதல்வரைக் காண வந்திருந்த பள்ளி மாணவி மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

More Stories
ரூ.5 கோடி லஞ்சப் புகார் எதிரொலி: லயோலா மணிக்கு நெருக்கடியா? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
ஐடிபிஐ வங்கியில் நவம்பர் 2, 3-ல் நாடு தழுவிய வேலைநிறுத்தம்! வாடிக்கையாளர்களுக்கு வங்கி சேவைகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு
ரூ.634 கோடி முறைகேடு விவகாரம்: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை ஜனனி அசோக்குமார்!