மணப்பாறையில் இன்று காலை 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் சூரியா நினைவு அறக்கட்டளை சமுதாயக் கல்லூரி இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.
இந்த பேரணி, வையம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் சூரியா நினைவு அறக்கட்டளை சமுதாயக் கல்லூரியின் நிறுவனத் தலைவர் டாக்டர் சூரியா சுப்பிரமணியன் முன்னிலையில்,
சமூக நலத்துறை மாவட்ட அலுவலர் விஜயலக்ஷ்மி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் சூரியா சமுதாயக் கல்லூரி தாளாளர் நாகலக்ஷுமி வரவேற்புரை வழங்கினார்.
இந்த பேரணியில் சூரியா சமுதாயக் கல்லூரி மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பொதுமக்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
மேலும், மணப்பாறை சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொறுப்பாளர், மணப்பாறை நகராட்சி நிர்வாகம், காவல்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை, மணப்பாறை ரோட்டரி சங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மணப்பாறை பேருந்து நிலையத்திலிருந்து பெண்கள் மேல்நிலைப்பள்ளி வரை பேரணி நடைபெற்றது.
பேரணியில் “100% வாக்குப்பதிவு”, “வாக்கு விற்காதீர்”, “எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல”, “வாக்களிப்பது எங்கள் உரிமை” போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.
போக்குவரத்து காவல்துறையின் பாதுகாப்புடன் பேரணி சிறப்பாக நடைபெற்றது. பேரணியில் தேர்தல் விழிப்புணர்வு பற்றிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது

More Stories
5 தொகுதிகளில் இடைத்தேர்தல் தள்ளிப்போவது ஏன்? நீதிமன்ற வழக்குகள் குறித்து வெளியான தகவல்
தவெக – காங்கிரஸ் கூட்டணி எந்த நேரத்திலும் முறியலாம்: முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி எச்சரிக்கை
செப்டம்பர் 10-ல் லண்டன் புறப்படுகிறார் முதல்வர் விஜய்: 6 நாட்கள் சுற்றுப்பயணத்தில் முக்கிய ஒப்பந்தங்கள்?