வீட்டில் பீரோவை உடைக்காமலேயே 21 சவரன் தங்கம்.. 2 ஏக்கர் நிலப்பத்திரம் திருட்டு …

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் வீட்டில் உரிமையாளர்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது பீரோவில் இருந்த 21 சவரன் தங்க நகை பணம் 2 ஏக்கர் நிலம் பத்திரம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. வீட்டின் கதவு பூட்டு பீரோ லாக்கர் உடைக்காமலேயே நகை பணம் நிலபத்திரம் காணாமல் போய் இருப்பதாக வந்திருக்கும் புகார் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த களத்தூர் கிராம பகுதியை சேர்ந்த 52 வயதாகும் பழன என்ற விவசாயி வசித்து வருகிறார். இவரது மனைவி பராசக்தி(45) இவர்களுக்கு கோபி கிருஷ்ணன்(26) என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக சென்று விட்டு குடும்பத்தினர் வீடு திரும்பி உள்ளனர். நேற்று இரவு பழனி மற்றும் பராசக்தி ஆகிய இருவரும் வீட்டின் நுழைவாயில் வராண்டாவில் உறங்கியுள்ளனர் இவர்களது மகன் கோபி கிருஷ்ணன் வீட்டில் மேலே இருக்கும் அறையில் உறங்கியதாக சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக காலை குடும்ப செலவிற்காக பணத்தை எடுப்பதற்காக பராசக்தி பீரோவை திறந்து பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 21 சவரன் தங்க நகை 7 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் 2 ஏக்கர் நிலத்திற்கான பத்திரம் ஆகியவை பீரோவில் இருந்து திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக அவளுர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவு மற்றும் பீரோ போன்றவை உடைக்கப்படாமல் இருக்கும் நிலையில் நகை பணம் மற்றும் நில பத்திரம் காணாமல் போயிருப்பதாக புகார் தெரிவித்திருக்கும் நிலையில் கைரேகை நிபுணர்களின் உதவியுடன் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்