September 10, 2026

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் இன்று பதவியேற்பு!

உச்சநீதிமன்ற 53வது தலைமை நீதிபதியக சூர்யகாந்த் இன்று பொறுப்பேற்க உள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த பி.ஆர்.கவாய் நேற்றுடன் ஓய்வு பெற்றார். இந்த நிலையில், உச்சநீதிமன்ற 53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் இன்று பொறுப்பேற்கிறார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார். இன்று பதவியேற்கும் சூர்யகாந்த், 2027 பிப்ரவரி 9-ம் தேதி வரை இப்பதவியில் இருப்பார்.

கடந்த 2019-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக சூர்யகாந்த் பொறுப்பேற்றார். ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது, பிஹார் வாக்காளர் பட்டியல் திருத்தம், பெகாசஸ் ஸ்பைவேர் வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தீர்ப்புகளை வழங்கிய உச்ச நீதிமன்ற அமர்வுகளில் நீதிபதி சூர்யகாந்த் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

You may have missed