September 10, 2026

பாரதிராஜா சீடர் சாதித்தது : தமிழ் சினிமா டூ ஆக்‌ஷன் தெலுங்கு சினிமா ‘டாக்டர் ராஜசேகர்’ –

டாக்டர் ராஜசேகர், இயக்குநர் பாரதிராஜாவின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டம் லட்சுமிபுரத்தில் பிறந்தவர். இருப்பினும் இவர் தெலுங்கு மொழி பேசும் மக்களை சேர்ந்தவர் தான். இவர் தந்தை ஆந்திராவில் காவல் துணை ஆய்வாளராக பணியாற்றியவர்

ராஜசேகர் குடும்ப சூழ்நிலை காரணமாக, தமிழ்நாட்டில் இருந்து ஆந்திராவுக்கு குடிபெயர்ந்தார். இன்று வரை அவர் அங்குதான் வசித்து வருகிறார்.

பாரதிராஜா இயக்கத்தில் அறிமுகம்

தேனிக்காரர் என்பதால் என்னவோ அந்த ஊர்க்காரர் பாரதிராஜாவின் படத்திலேயே முதன் முதலில் தமிழில் அறிமுகமானார். 1984ஆம் ஆண்டு வந்த “புதுமைப் பெண்” படத்தில் ராஜசேகர் அறிமுகமானார்.

பொதுவாக பாரதிராஜாவின் படங்களில் அறிமுகமாகும் ஹீரோயினுக்கு பாரதிராஜாவே “R” என்ற எழுத்தில் பெயர் வருமாறு வைப்பார். அவர்களுக்கு அது சக்ஸஸ் ஆகிவிடும். இங்கே ராஜசேகருக்கு அவர் பெயர் வைத்தாரோ! என்னவோ தெரியாது. அந்த “R” எழுத்தில் ஆரம்பிக்கும் ராஜசேகருக்கும் சினிமா பயணம் வெற்றி தான்.

தமிழில் 2 படங்கள்

1984ல் ‘புதுமைப்பெண்’ படத்தில் நடித்துவிட்டு ‘புதிய தீர்ப்பு’ என்ற படத்திலும் நடித்தார். தமிழில் நேரடியாக “2 படங்கள்” மட்டுமே நடித்துள்ளார் ராஜசேகர். அதன்பிறகு, முழுவதும் தெலுங்கு படங்கள் தான்.

“இதுதாண்டா போலீஸ்..”

இவர் நடித்த ‘அங்குசம்’ என்ற படம் ஆந்திராவில் சக்கை போடு போட்டது, அந்த படம்தான் தமிழில் “இதுதாண்டா போலீஸ்..” என மொழிமாற்றம் செய்யப்பட்டு, வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது.

மொழிமாற்றம் செய்யப்பட்டு வந்த இந்த படம் தமிழிலும் பரபரப்பாக பேசப்பட்டது. குறிப்பாக “ஸ்பாட் வைடா இவனுக்கு..!” என வசனம் பேசும் வில்லன் ராமிரெட்டியுடன் இவர் மோதும் காட்சிகளும்; பேசும் காட்சிகளும் அனல் பறந்தன.

தொடர்ந்து டப்பிங் படங்கள்

அதன் பிறகு இவரின் டப்பிங் படங்களுக்கு தமிழில் நல்ல வரவேற்பு ஏற்பட்டது. இவர் நேரடியாக நடிக்காமல் “டப்” மட்டுமே செய்து வெளியிடப்பட்ட “மீசைக்காரன், எவனாயிருந்தா எனக்கென்ன” அடுத்தடுத்து வெளிவந்த இவரின் படங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்றபை பெற்றது.

இவரும் நக்மாவும் இணைந்து நடித்து வெளிவந்த “மனிதா மனிதா..” என்ற படத்தில் ஏ.ஆர் ரஹ்மானின் இசையில் பாடல்கள் ஹிட்டாகின.

அதேபோல, ராஜசேகர் நடித்த “தலைவா” படம் தமிழ்நாட்டில் பல தியேட்டர்களில் சில்வர் ஜூபிலி கொண்டாடியது.

‘ஓம்’ படம் ரீமேக்

அதிகமுறை ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட “கன்னட சூப்பர் ஸ்டார் உபேந்திரா” இயக்கிய “ஓம்” படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தவர் ராஜசேகர் தான். இது தமிழிலும் டப் செய்து வெளியிடப்பட்டு “ஹிட்டானது” என்பது குறிப்பிடத்தக்கது.

You may have missed