September 10, 2026

ஆபரண தங்கம் விலை மீண்டும் ஏறுமுகம்…ஒரு சவரன் ரூ.94,400

தங்கம் விலை இன்று (நவம்பர் 26) ஒரே நாளில் சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்தது. இதனால் ஒரு சவரன் 94,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை இறக்கை கட்டாமல் பறந்து கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கிய விலை உயர்வென்பது, கடந்த அக்டோபர் 17-ம் தேதி ஒரு சவரன் தங்கம் 97,600 ரூபாயாக உச்சம் தொட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தீபாவளி பண்டிகை முடிந்த பிறகு தங்கம் விலை சற்று குறைந்தது. இந்த நிலையில், மீண்டும் தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாக உயர்ந்து வருகிறது.

நேற்று (நவம்பர் 25) தங்கம் விலை கிராமுக்கு 200 ரூபாய் உயர்ந்து, 11,720 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 1,600 ரூபாய் அதிகரித்து, 93,760 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், இன்று (நவம்பர் ,26) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் 94,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 11,800 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதே போல வெள்ளி விலையும் கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 176 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி 2000 ரூபாய் வரை உயர்ந்து 1,76,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

You may have missed