சென்னை:
மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் 31-வது தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாடு மற்றும் தென் மண்டல குழு கூட்டம் சென்னை மாமல்லபுரம் அருகே உள்ள கோவளத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இன்று நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் தென் மண்டல குழுவின் தலைவராக மத்திய அமைச்சர் அமித்ஷாவும், துணைத் தலைவராக தமிழக முதலமைச்சரும் செயல்படுகின்றனர்.
முக்கிய விவாதப் பொருட்கள்:
- மாநிலங்களுக்கு இடையேயான பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள்.
- பொருளாதார வளர்ச்சி, புதிய தொழில் முதலீடுகள், கல்வி மற்றும் சுகாதாரம்.
- நதிநீர் பங்கீடு மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்கள்.
- பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளை விரைந்து விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைத்தல்.
- தொகுதி மறுசீரமைப்பு, காவிரி நதிநீர் விவகாரம் மற்றும் மேகதாது அணைப் பிரச்சனை உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து பேசப்பட உள்ளதாகத் தெரிகிறது.
பங்கேற்பாளர்கள்:
மத்திய-மாநில அரசுகளின் உறவை வலுப்படுத்தும் நோக்கில் நடைபெறும் இந்த மாநாட்டில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களின் முதலமைச்சர்கள்/துணை முதலமைச்சர்கள், புதுச்சேரி, அந்தமான்-நிக்கோபார், லட்சத்தீவு ஆகியவற்றின் துணைநிலை ஆளுநர்கள், மத்திய-மாநில அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

More Stories
சாட்சியத்தை மட்டும் வைத்து மரண தண்டனை வழங்க முடியாது: போக்சோ வழக்கில் கைதானவரை விடுதலை செய்து மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!
5 தொகுதிகளில் இடைத்தேர்தல் தள்ளிப்போவது ஏன்? நீதிமன்ற வழக்குகள் குறித்து வெளியான தகவல்
மதநல்லிணக்க கந்தூரி விழா: அனைத்து சமூக குடும்பங்களுக்கும் வாளிகளில் நெய்ச்சோறு, கறிக்குழம்பு வழங்கி நெகிழ்ச்சி!