மதுரையை சேர்ந்த 33 வயதான பெண், கடந்த 1ம் தேதி பூக்கள் வாங்க மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டிற்கு சென்றுள்ளார். பூக்கள் வாங்கியபோது, அங்கு நின்றிருந்த மதுரை, தெற்கு ஆவணி மூல வீதியை சேர்ந்த பாண்டியராஜன்(33), அந்த பெண்ணை பார்த்து தகாத சைகைகளை காட்டியுள்ளார். மேலும், அவரை தனது செல்போன் மூலம் ரகசியமாக படம் பிடித்துள்ளார்.
பின்னர் பெண்ணை பின்தொடர்ந்து சென்றவர், பாலியல் உறவுக்கு அழைத்து தொல்லை கொடுத்துள்ளார். பின்னர், ஜூன் 4ம் தேதியும் அதே பெண்ணை வழிமறித்து பாலியல் உறவுக்கு வருமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். இதற்கு உடன்படாவிட்டால் செல்போனில் எடுத்த படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். இதுகுறித்து அப்பெண் தெப்பக்குளம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, பாண்டியராஜனை கைது செய்தனர்.

More Stories
சாட்சியத்தை மட்டும் வைத்து மரண தண்டனை வழங்க முடியாது: போக்சோ வழக்கில் கைதானவரை விடுதலை செய்து மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!
5 தொகுதிகளில் இடைத்தேர்தல் தள்ளிப்போவது ஏன்? நீதிமன்ற வழக்குகள் குறித்து வெளியான தகவல்
மதநல்லிணக்க கந்தூரி விழா: அனைத்து சமூக குடும்பங்களுக்கும் வாளிகளில் நெய்ச்சோறு, கறிக்குழம்பு வழங்கி நெகிழ்ச்சி!