ஊழியர்கள் பற்றாக்குறைக்கு நடவடிக்கை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். அதன்படி வருகிற மே 25, 26 (திங்கள், செவ்வாய்) ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் உள்ள எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். அதற்கு முந்தைய மே 23 -4ஆவது சனிக்கிழமை, மே 24 ஞாயிறு விடுமுறை நாள்களாகும். அதேபோல மே 27 பக்ரீத் பண்டிகை அன்று பெரும்பாலான மாநிலங்களில் அரசு விடுமுறை நாளாகும்.
இதனால் எஸ்பிஐ வங்கி சேவைகள், தொடர்ந்து 5 நாள்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து எஸ்பிஐ வங்கிகளில் அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி வழங்க நாங்கள் முழு முயற்சி மேற்கொண்டு வருகிறோம். அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள் தங்களின் பணத்தேவைகளுக்கு ஏடிஎம்கள், யோனா எஸ்பிஐ செயலி, யுபிஐ, இன்டர்நெட் பேங்கிங் ஆகியவற்றைப் பயன்படுத்தவும் அகில இந்திய பாரத ஸ்டேட் வங்கி ஊழியர் கூட்டமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

More Stories
சாட்சியத்தை மட்டும் வைத்து மரண தண்டனை வழங்க முடியாது: போக்சோ வழக்கில் கைதானவரை விடுதலை செய்து மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!
5 தொகுதிகளில் இடைத்தேர்தல் தள்ளிப்போவது ஏன்? நீதிமன்ற வழக்குகள் குறித்து வெளியான தகவல்
மதநல்லிணக்க கந்தூரி விழா: அனைத்து சமூக குடும்பங்களுக்கும் வாளிகளில் நெய்ச்சோறு, கறிக்குழம்பு வழங்கி நெகிழ்ச்சி!