தேனி அருகே தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் நகையே இல்லாமல் நகை அடமானம் வைத்தது போன்று ரூ.14 கோடி மோசடி நடந்துள்ளதாக அதிகாரிகள் அளித்த புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம், ஓடைப்பட்டியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில், வங்கி உயரதிகாரிகள் சமீபத்தில் ஆய்வு செய்தனர். அதில் வங்கிக்கடன் வழங்கியதில் முறைகேடு நடந்தது தெரிய வந்தது.
வங்கியில் பணியாற்றிய அதிகாரி உள்பட சிலர் போலியான வாடிக்கையாளர்கள் பெயரில் நகைக்கடன் பெற்று பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல தேனி அருகே உள்ள கூழையனூர் கிளையிலும் வங்கியிலும் மோசடி நடந்திருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இரண்டு கிளையிலும் மொத்தம் ரூ.14 கோடி வரை முறைகேடு நடந்திருப்பதாக வங்கியின் உயர் அதிகாரிகள் தரப்பில் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகார் தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, ‘‘வங்கியில் நடந்த மோசடி தொடர்பான புகார் மீது விசாரணை நடந்து வருகிறது. புகார்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்படும். விசாரணையை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

More Stories
திருமலை: மனைவி, குழந்தைகள் உள்பட 6 பேரை வெட்டிக் கொன்ற சைக்கோ….
தூத்துக்குடி: தனித் தனியாக வந்த அமைச்சர்கள்! முத்துக்கோன் விழாவில் முற்றிய மோதல்!
அதிமுகவில் 6 எம்.எல்.ஏக்கள் அவுட்…. சசிகலா நடத்தும் ரகசிய டீலிங்! எடப்பாடி விடுத்த எச்சரிக்கை!!!