போக்சோ வழக்கில் சிறைக்கு அனுப்பியதால் ஆத்திரம் அடைந்த சைக்கோ, தனது மனைவி, குழந்தைகள் உள்பட 6 பேரை வெட்டிக்கொலை செய்தார். இதில் புகார் தந்த சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றார்.
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் ஷாபாத் அடுத்த தைவாலகுடாவை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவருக்கு அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார்(35) என்பவர் கடந்த மே மாதம் 16ம் தேதி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் சிறுமி தனது தாயுடன் சேர்ந்து போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளான ராஜ்குமார், சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி சில தினங்களுக்கு முன் ராஜ்குமார் ஜாமீனில் வெளியே வந்தார். சிறுமியின் குடும்பத்தினர் மீது கடும் ஆத்திரத்தில் இருந்த ராஜ்குமார் இன்று அதிகாலை சிறுமியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமியின் பாட்டி ருக்கம்மா(65), தாய் சித்யாலலட்சுமி(45) ஆகியோரை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். பின்னர் சிறுமியை தூக்கிச்சென்று அங்குள்ள விவசாய நிலத்தில் பலாத்காரம் செய்து அவரையும் கொலை செய்துள்ளார்.
பின்னர் ஆத்திரம் அடங்காமல் தனது வீட்டிற்கு சென்ற ராஜ்குமார், அங்கிருந்த தனது மனைவி பார்வதி சரிதா(30), குழந்தைகளான பரிஷித்(3), தைவிஷித்(2) ஆகியோரையும் வெட்டிக்கொலை செய்துள்ளார். இதையடுத்து அதே பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று ‘நான் 6 பேரை கொலை செய்துவிட்டேன்’ எனக் கூறியுள்ளார். இதைகேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ேபாலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதைபார்த்த ராஜ்குமார் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
இதையடுத்து போலீசார் சிறுமி மற்றும் அவரது தாய், பாட்டி, பார்வதி சரிதா, அவரது குழந்தைகள் உள்பட 6 பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ராஜ்குமாரை தேடி வருகின்றனர். சிறுமியிடம் தவறாக நடந்ததற்காக போக்சோ வழக்கில் சிறைக்கு சென்று வந்த நபர் சைக்கோவாக மாறி மனைவி, குழந்தைகள் உள்பட 6 பேரை கொைல செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சி மற்றும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More Stories
தூத்துக்குடி: தனித் தனியாக வந்த அமைச்சர்கள்! முத்துக்கோன் விழாவில் முற்றிய மோதல்!
அதிமுகவில் 6 எம்.எல்.ஏக்கள் அவுட்…. சசிகலா நடத்தும் ரகசிய டீலிங்! எடப்பாடி விடுத்த எச்சரிக்கை!!!
விஜய் அமைச்சரவையில் சௌமியா அன்புமணி?… தமிழக அரசியலில் வெடித்த அடுத்த வெடிகுண்டு!!!