September 10, 2026

 மனைவியை Rooster Position இல் நிற்க வைத்து சித்திரவதை; கணவன் கைது

மும்பை தேவ்னார் பகுதியைச் சேர்ந்தவர் அர்பாஸ் செய்யத். பல்வேறு கிரிமினல் வழக்குகள் அர்பாஸ் மீது இருக்கின்றன. உள்ளூரில் மிரட்டி பணம் பறித்தல் போன்ற கிரிமினல் வேலைகளில் ஈடுபட்டு வந்தான்.

அர்பாஸ் தனது வீட்டில் மனைவியுடன் குடும்ப பிரச்னையில் வாக்குவாதம் செய்தார். இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் அவர் தனது மனைவியை அடித்து உதைத்து கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார்.

பின்னர் மனைவியை தனி அறையில் அடைத்து வைத்தார். அதோடு வாளைக் காட்டி கொலை செய்துவிடுவதாகவும், முகத்தில் ஆசிட் ஊற்றிவிடுவதாகவும் கூறி மிரட்டி தனது மனைவியை தனிமை நிலையில் தரையில் கால்களை ஊற்றி அமரவிடாத (rooster position) நிலையில் 4 மணி நேரம் இருக்கும்படி கேட்டுக்கொண்டார். அதாவது கால்களால் அல்லாமல் கைகளை ஊற்றி நிற்கச் சொல்லியிருக்கிறார்.

கணவனின் மிரட்டலுக்குப் பயந்து அப்பெண் அது போன்று 4 மணி நேரம் இருந்தார். அர்பாஸ் வெளியில் சென்ற நேரம் பார்த்து அப்பெண் அங்கிருந்து தப்பித்து தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றார். உடனே அர்பாஸ் அங்கும் பின்தொடர்ந்து சென்றார். அங்கு சென்று ரகளையில் ஈடுபட்ட அர்பாஸ் தனது மனைவியை கத்தியால் குத்தினார்.

இதனால் வேறு வழியில்லாமல் அப்பெண்ணின் குடும்பத்தினர் இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து அர்பாஸைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

போலீஸார் நடத்திய விசாரணையில் அர்பாஸ் மீது மும்பை முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களில் 19 கிரிமினல் வழக்குகள் இருப்பது தெரிய வந்தது. அர்பாஸ் மனைவி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் அர்பாஸ் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தன

You may have missed