சென்னை:
சுபமுகூர்த்தம் மற்றும் விசேஷ தினங்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி கொண்டாடப்படும் ஆடிப்பெருக்கை ஒட்டி, பொதுமக்கள் வசதிக்காக அனைத்து சார்-பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும் என்று தமிழ்நாடு பதிவுத்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து பதிவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
- ஒற்றை சார்-பதிவாளர் அலுவலகங்கள்: வழக்கமாக வழங்கப்படும் 100 டோக்கன்களுக்குப் பதிலாக, 150 டோக்கன்கள் வழங்கப்படும்.
- இரண்டு சார்-பதிவாளர்கள் உள்ள அலுவலகங்கள்: 200 டோக்கன்களுக்குப் பதிலாக, 300 டோக்கன்கள் வரை வழங்கப்படும்.
- அதிகளவில் பத்திரப்பதிவு நடைபெறும் 100 அலுவலகங்கள்: வழக்கமான எண்ணிக்கையை விட கூடுதலாக 150 டோக்கன்கள் ஒதுக்கப்படும்.
- தத்கால் பதிவு: ஏற்கனவே வழங்கப்படும் 12 தத்கால் பதிவு டோக்கன்களுடன் கூடுதலாக 4 டோக்கன்கள் (மொத்தம் 16) வழங்கப்படும்.
ஆடிப்பெருக்கு தினத்தன்று பொதுமக்கள் சிரமமின்றி பத்திரப்பதிவு செய்ய இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

More Stories
அமைச்சர் தவறு செய்தாலும் தவறுதான்!” ஆடியோ சர்ச்சையில் முதல்வர் ஜோசப் விஜய் எடுக்கப்போகும் அதிரடி முடிவு என்ன?
ஓ.பன்னீர்செல்வம் தவெகவில் இணைய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சர் பதவி பறிப்பா? திரு.வி.க. நகர் எம்.எல்.ஏ. பல்லவிக்கு வாய்ப்பு? த.வெ.க. தலைமை தீவிர ஆலோசனை!