ஒரே நாளில் பொன்னேரி, சோளிங்கர், துறையூர் ஆகிய 3 இடங்களில் ராகுல் காந்திக்கு பிரசாரம்…
காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று காலை சென்னைக்கு விமானத்தில் வருகை தந்துள்ளார். அவரை, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பொறுப்பாளராக செயல்பட்டு வரும் கிரிஷ் சோடங்கர் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் வரவேற்றனர். இதனை தொடர்ந்து, அவர் ஹெலிகாப்டரில் பொன்னேரி சென்று காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்கிறார். இதன் பின்பு, சோளிங்கர் தொகுதிக்கு சென்று பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். இதன் பின் சென்னையில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரும் அவர், பின்னர் ஹெலிகாப்டரில் துறையூர் சென்று மாலை 4 மணியளவில் நடைபெறும் கூட்டமொன்றில் ராகுல் காந்தி பங்கேற்கிறார்.

More Stories
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு – 4 முனை போட்டி தீவிரம்!
தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் புறப்படுகிறார் முதல்வர் விஜய்: பதவியேற்ற பின் முதல் வெளிநாட்டுப் பயணம்!
5 தொகுதிகளில் இடைத்தேர்தல் தள்ளிப்போவது ஏன்? நீதிமன்ற வழக்குகள் குறித்து வெளியான தகவல்