செய்தி மக்கள் தொடர்புத் துறை: 8 உதவி அலுவலர்களுக்கு மக்கள் தொடர்பு அலுவலர்களாகப் பதவி உயர்வு!

சென்னை: தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையில் பணியாற்றி வந்த 8 உதவி மக்கள் தொடர்பு அலுவலர்களுக்கு , மக்கள் தொடர்பு அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

பதவி உயர்வு பெற்ற அதிகாரிகள் மற்றும் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ள புதிய அலுவலகங்களின் விவரங்கள் பின்வருமாறு:

  • ச. சிவக்குமார்: சென்னை மாநகராட்சி உதவி மக்கள் தொடர்பு அலுவலராகப் பணியாற்றி வந்த இவர், தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • எஸ். செல்வலெட் சுஷ்மா: கன்னியாகுமரி மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலராக இருந்த இவர், தர்மபுரி அரசு போக்குவரத்து கழகத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மு. சுதாகர்: திருச்சி மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலராக இருந்த இவர், திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • என். ஜி. நந்தகுமார்: வேலூர் மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலராகப் பணியாற்றிய இவர், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • கே. எம். எஸ். முகமது ரியாஸ்: ஆளுநர் மாளிகை உதவி மக்கள் தொடர்பு அலுவலராக இருந்த இவர், அதே அலுவலகத்திலேயே மக்கள் தொடர்பு அலுவலராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
  • என். விஜயகுமார்: ராமநாதபுரம் மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலராக இருந்த இவர், மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • எஸ். எஸ். சதீஷ் பாபு: காஞ்சிபுரம் மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலராகப் பணியாற்றிய இவர், தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • எம். கேசவமூர்த்தி: சென்னை தலைமைச் செயலக செய்தி வெளியீட்டுப் பிரிவின் உதவி மக்கள் தொடர்பு அலுவலராக இருந்த இவர், அதே பிரிவிலேயே மக்கள் தொடர்பு அலுவலராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.

தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் இந்த அதிரடி பதவி உயர்வு மற்றும் இடமாற்ற உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது.