சென்னை: ராஜீவ் காந்தி சாலை (OMR) மற்றும் கிழக்குக் கடற்கரைச் சாலை (ECR) ஆகியவற்றை இணைக்கும் பகுதிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதை மேற்கொள்ளும் வகையில் ₹270 கோடி மதிப்பிலான பிரம்மாண்ட திட்டம் தற்போது முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நவீன ஆறு வழிப்பாலம் ₹36 கோடி செலவில் கட்டப்படவுள்ளது. இது பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலையின் நீட்டிப்பில் தொடங்கி, கிழக்கு கடற்கரைச் சாலையிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடல் அலைகளின் அதிகபட்ச உயரத்திலிருந்து நான்கு மீட்டர் உயரத்தில் பாலம் அமைக்கப்படுவதால், படகு போக்குவரத்துக்கும் போதுமான இடம் கிடைக்கும்.
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கிழக்கு கடற்கரை சாலையையும் (ECR) பழைய மகாபலிபுரம் சாலையையும் (OMR) இணைக்கும் திட்டம் விரைவில் நிறைவேறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பக்கிங்ஹாம் கால்வாயின் மீது இதற்காக இரும்பு பாலம் அமைக்கப்பட உள்ளது. தொரைப்பாக்கம் (ஓஎம்ஆர்) முதல் நீலாங்கரை (ஈசிஆர்) ஆகியவற்றை இணைக்கும் இரும்புப் பாலத்தை ₹37 கோடிக்கு மாநில நெடுஞ்சாலைத் துறை அமைக்க உள்ளது. இதற்கான டெண்டர் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சோழிங்கநல்லூர் மற்றும் திருவான்மியூரில் நெரிசலைக் குறைக்கும் வகையில் ஆறு வழிச்சாலை, 36 மீட்டர் நீளமுள்ள பாலத்தில் bund மற்றும் அப்ரோச் சாலைகள் அமைக்கப்படும்.
இத்திட்டத்தின் மொத்த செலவான ₹270 கோடியில், நிலம் கையகப்படுத்தலுக்காக மட்டும் ₹200 கோடி செலவிடப்படுகிறது. சாலைகள் அமைப்பதற்கும், பாலத்தின் கட்டுமானப் பணிகளுக்கும் ₹70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீலாங்கரை பகுதியில் நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்துச் சிலர் நீதிமன்றம் சென்றுள்ளனர். இந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அந்தப் பகுதியில் உள்ள 63 வீடுகள் இடிக்கப்படவுள்ளன.

More Stories
சென்னை – நெல்லை இடையே முன்பதிவில்லா மெமு எக்ஸ்பிரஸ் : தெற்கு ரயில்வே அறிவிப்பு
விஜய்யுடன் ஒருபோதும் கூட்டணி கிடையாது: பாஜக தலைவர்
வேலை நாளான வியாழக்கிழமை தேர்தலை நடத்தியது பாராட்டத்தக்கது – நடிகர் வடிவேலு