சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கணவரை பிரிந்து இளம் பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். அவர் அங்கிருந்த ஷோரூம் ஒன்றில் பணியாற்றி வந்தார். அப்போது உடன் பணியாற்றிய சக்திவேல் என்பவருடன் பழகி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு 2 மணியளவில் அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்த சக்திவேல், அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
இதனை பார்த்த அந்த பெண்ணின் 10 வயது மகன், சக்திவேலை தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல், அந்த தாய் மற்றும் மகனை சரமாரியாக வெட்டியதாக தெரிகிறது. இதில் பலத்த காயம் அடைந்த சிறுவன், துடிதுடித்து உயிரிழந்தார். அந்த பெண்ணின் வலது கை துண்டிக்கப்பட்டு, தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சிறுவனின் சடலத்தை கண்டு உறவினர்கள் கதறி அழுதனர். கொலை செய்துவிட்டு தப்பிய சக்திவேலை காவலர்கள் தேடினர். இந்நிலையில் அவர் கருப்பூர் கோரிமேடு பகுதியில் மரத்தில் பெல்ட்டால் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டது தெரியவந்தது.

More Stories
கடன் பிரச்னையால் காவல்நிலையம் முன் தந்தை, மகன் தீக்குளிக்க முயற்சி:
காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி 3 கல்லூரி மாணவிகளை ஏமாற்றிய தவெக நிர்வாகி மகன்…
கணவரை கொடூரமாக கொன்ற வீடியோவை மீண்டும், மீண்டும் பார்த்து ரசித்த மனைவி: