குளச்சல் அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன். மீனவரான இவர், தனது மனைவி ஜாஸ்மின் லலிதா மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்தார். குடும்ப வாழ்க்கை சுமுகமாகச் சென்று கொண்டிருந்த நிலையில், கணவன் – மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வந்ததாக
சமீபத்தில் ஏற்பட்ட தகராறின் காரணமாக கோபமடைந்த ஜாஸ்மின் லலிதா, கணவரை விட்டு வெளியேறி கொட்டில்பாடு பகுதியில் வசிக்கும் தனது அக்கா மேரி கலாவின் வீட்டில் தங்கியிருந்தார். மனைவி வீடு திரும்பாததால் ஆத்திரமடைந்த ராஜன், மேரி கலாவின் வீட்டுக்குச் சென்று ஜாஸ்மின் லலிதாவை அழைத்து செல்ல முயன்றுள்ளார். ஆனால், அவருடன் செல்ல ஜாஸ்மின் லலிதா மறுத்ததால் இருவருக்கும் மீண்டும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது, மேரி கலாவின் கணவர் புஷ்பநாதன் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தியதுடன், ராஜனுக்கு அறிவுரை கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் அத்துடன் பிரச்சினை முடிவடையவில்லை. சில நேரம் கழித்து மீண்டும் அதே வீட்டிற்கு திரும்பி வந்த ராஜன், அப்போது வீட்டின் சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த புஷ்பநாதனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற ராஜன், தன்னிடம் மறைத்து வைத்திருந்த கத்தியை திடீரென எடுத்து புஷ்பநாதனின் கழுத்தை அறுத்ததாக கூறப்படுகிறது. அதன்பின் அவரது முதுகுப் பகுதியிலும் சரமாரியாக குத்தியுள்ளார். “இந்தப் பிரச்சினைக்கு நீயே காரணம்… நீ உயிரோடு இருந்தால்தான் என் மனைவி உன் வீட்டுக்கு வருவாள்…” என்று கூறிக்கொண்டே ராஜன் தாக்குதல் நடத்தியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த புஷ்பநாதனை, அவரது மனைவி மேரி கலா மற்றும் அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த குளச்சல் போலீசார், உடலை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

More Stories
போதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி அடித்துக் கொலை…
ஆர்.டி.ஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை: 9 பேர் மீது வழக்குப்பதிவு!
மதுரையில் இளைஞர் ஓடஓட விரட்டி படுகொலை …