MY MADURAI என்ற பெயரில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா ஐடியை தொடங்கி மதுரை மக்களை நம்பி வந்துருக்கேன் என கூறி செண்டிமெண்டலாக பாலோவர்ஸ்களை பெறுவதற்காக வீடியோக்களை பதிவிட்டுவந்தார் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த செல்வா (20). பரிசு கொடுத்தால் பாலோவர்ஸ்களை புடித்துவிடலாம் என நினைத்து மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட், தெப்பக்குளம் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் கல்லூரி மாணவிகளை குறிவைத்து தனது இன்ஸ்டா, பேஸ்புக் பக்கத்தை பாலோ அப் செய்திருந்தால் ப்ளுடூத் பரிசு அளித்து வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில் காலை 10 மணிக்கு பாலோவர்ஸ்களை பிடிப்பதற்காக பெரியார் பஸ் ஸ்டாண்டில் பாலோவர்களுக்கு நிறைய ப்ளூடூத் நெக்பேண்ட் தருவதாக முன்னதாக வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோக்களை பார்த்த இளைஞர்கள், இளம்பெண்கள் சிலர் காலை 10 மணிக்கு பெரியார் பஸ்ஸ்டாண்டில் குவிந்தனர். இதனை பார்த்த திடீர் நகர் காவல்துறையினர் கொத்தாக ரீல்ஸ் இளைஞர் செல்வாவை தூக்கி விசாரணை நடத்த தொடங்கினர். பின்னர் அனுமதி இல்லாமல் பொதுமக்களை கூட்டக்கூடாது என அறிவுரை வழங்கினர்.

More Stories
பொதுமக்கள் மீது வெடிகுண்டு வீச்சு: தஞ்சை, பந்தலூரில் பரபரப்பு — 7 பேர் கைது
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
விநாயகர் சதுர்த்தி எதிரொலி: பக்தர்கள் வருகை குறைந்து வெறிச்சோடிய திருத்தணி முருகன் கோவில்