September 19, 2026

அழகே பொறாமைப்படும் பேரழகு… அழகிப்போட்டியில் அசத்திய திருநங்கைகள்…

கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா கடந்த 14ஆம் தேதி சாகை வார்த்துலுடன் தொடங்கியது. இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்வு நாளை நடைபெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் தேர் திருவிழாவும், அதனைத் தொடர்ந்து திருநங்கைகள் தாலி அறுக்கும் நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் திருநங்கைகள் விழுப்புரத்தில் குவிந்துள்ளனர்.

திருநங்கைகளுக்கான கலை நிகழ்ச்சிகள், அழகிப் போட்டிகள் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றன. இன்று தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பின் சார்பில் மிஸ் கூவாகம் அழகிப்போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.