September 10, 2026

கோயில் லட்டு விற்பனையில் மெகா மோசடி.. விசாரணையில் அடுத்தடுத்து அதிர்ச்சி.. என்ன நடந்தது?

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் பிரசாத லட்டு விற்பனையில், 3 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்ததாக புகார் எழுந்த நிலையில், 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2023-24ஆம் நிதியாண்டிலிருந்து ராமநாத சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தினமும் இலவச லட்டு பிரசாதம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதுதொடர்பாக இணை ஆணையர் செல்லத்துரை, கடந்த மார்ச் மாதம் திடீரென மேற்கொண்ட ஆய்வில், பல்வேறு மோசடிகள் நடைபெற்றது தெரியவந்தது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மற்றும் ஊழியர்களிடம் இணை ஆணையர் செல்லத்துரை தீவிர விசாரணை நடத்தினார். இதில், கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் நடப்பாண்டு பிப்ரவரி மாதம் வரை 20 லட்சத்து 71 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு, கவுன்டரில் பக்தர்களிடம் 3 கோடியே 40 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, இளநிலை உதவியாளர்கள் கே.பஞ்சமூர்த்தி, லாவண்யா, அம்பிகா, டிக்கெட் விற்பனையாளர் செல்வி, பணிப்பெண் சிவனேஸ்வரி, தூய்மை பணியாளர் விக்ரம் ஆகிய ஆறு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

You may have missed