புது டெல்லியில் பாரம்பரியம் சிலம்பம் விளையாட்டு கூட்டமைப்பு நடத்திய மாபெரும் தேசிய அளவிலான சிலம்பப்போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா, மும்பை, உத்திரபிரதேஷ் ஆகிய மாநிலங்களில் இருந்து சுமார் 600க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர்கள் பங்கு பெற்றனர்.
இப்போட்டியில் மதுரை மாவட்டம் கோச்சடை கிராமத்தை சேர்ந்த ஆசான் கோ. க. முத்து வெங்கடாச்சலம் அவர்களின் ஸ்ரீ மதுரை மீனாட்ஷி லிங்கம் இலவச சிலம்பள்ளியில் இருந்து மா. க. லெட்சுமணன் ஐயா அவர்கள் மற்றும் க. முத்துச்செல்வி கண்ணன் தலமையில் இருந்தும் சிலம்பம் வீரர்கள் பங்கு பெற்றனர்.
இதில் இரட்டை கம்பு 21வயது பிரிவில் M.ஆர்த்தி மீனா முதல் இடத்தை பெற்று தங்கபதக்கம் வென்றார். இரட்டைகம்பு 17வயது பிரிவில் K.கோகுலஸ்ரீ இரண்டாம் இடம் பெற்று வெள்ளி பதக்கம் வென்றார். இதில் ஒற்றை கம்பு 16வயது பிரிவில் K.தர்ஷன் மூன்றாம் இடம் பெற்று வெங்கல பதக்கம் வென்றார். சிறப்பாக விளையாடி பரிசு பெற்று இன்று புதுடில்லியில் இருந்து திரும்பிய இவர்களை மதுரை கோச்சடை கிராமத்தை சேர்ந்த பொது மக்களும் பெற்றோர்களும் வெகுவாக பாராட்டி வரவேற்றனர்.

More Stories
அமைச்சர் சரத்குமாரை உடனடியாகப் பதவிநீக்கம் செய்ய வேண்டும்; தி.மு.க. மாணவர் அணி;
35 கிலோ இனி இல்லை.? – ரேஷன் முறையில் வரப்போகும் புதிய சட்டத் திருத்தம்…
உதவி பேராசிரியர் தேர்வு முடிவுகள் குறித்து எடப்பாடி பழனிசாமி கேள்வி…