சென்னை ஓட்டேரி எஸ்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்தவர் சாலமன் (26) தவெக உறுப்பினர் என கூறப்படுகிறது. இவர் தனது உறவினரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். அப்போது சாலமனின் செல்போனுக்கு அழைப்பு வந்தது. அதில் விஜய் நடித்த திரைப்பட பாடல் ரிங்டோனாக ஒலித்தது.
அப்போது, அங்கு வந்த இருவர், சாலமனிடம், “ஏன் விஜய் பாடலை ரிங்டோனாக வைத்துள்ளாய்?” என கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த போதை ஆசாமிகள் இருவரும் சாலமனை தாக்கி உள்ளனர்.
சம்பவம் குறித்து சாலமன் அளித்த புகாரின் பேரில் கீழ்ப்பாக்கம் போலீஸார் நடத்திய விசாரணையில், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த அம்பேத்கர் (35) மற்றும் செந்தில்குமார் (40) என்பது தெரியவந்தது. இதில், அம்பேத்கர் திமுக ஆதரவாளர் எனவும் செந்தில்குமார் நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. போலீஸார் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

More Stories
சாட்சியத்தை மட்டும் வைத்து மரண தண்டனை வழங்க முடியாது: போக்சோ வழக்கில் கைதானவரை விடுதலை செய்து மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!
5 தொகுதிகளில் இடைத்தேர்தல் தள்ளிப்போவது ஏன்? நீதிமன்ற வழக்குகள் குறித்து வெளியான தகவல்
மதநல்லிணக்க கந்தூரி விழா: அனைத்து சமூக குடும்பங்களுக்கும் வாளிகளில் நெய்ச்சோறு, கறிக்குழம்பு வழங்கி நெகிழ்ச்சி!