திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த பாதூர் கிராமத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு காரில் வந்த மர்ம ஆசாமிகள் செங்கல்பட்டு பாலாஜி பர்னிச்சர் மார்ட் என்ற பெயரில், அதிக முதலீட்டில் புதிதாக பர்னிச்சர் கடை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் விளம்பரத்திற்காக வீட்டு உபயோகப் பொருட்கள் மலிவு விலையில் விற்பதாக கூறி விளம்பரம் கொடுத்துள்ளனர்.
5 ஆயிரம் ரூபாய் செலுத்தினால்போதும் பாதி விலைக்கு வீட்டிற்கு தேவையான டிவி, மிக்ஸி, வாஷிங் மெஷின், கிரைண்டர் உள்ளிட்ட பொருட்கள் தருவதாக ஆசையை வார்த்தைக் கூறி வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அதை ஊர்மக்கள் நம்புவதற்காக முதலில் இரண்டு வீடுகளுக்கு மட்டும் கேஸ் அடுப்பை வழங்கி 30-க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் தலா 5 ஆயிரம் ரூபாயைப் பெற்றுக்கொண்டு அரைகுறையாக எழுதப்பட்ட ரசீதை வழங்கிவிடு அங்கிருந்து காரில் புறப்பட்டு விட்டனர்.

More Stories
சாட்சியத்தை மட்டும் வைத்து மரண தண்டனை வழங்க முடியாது: போக்சோ வழக்கில் கைதானவரை விடுதலை செய்து மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!
கனடா பெண்ணுக்கு நிர்வாண பூஜை செய்து மிரட்டல்: தென்காசி கிளி ஜோதிடர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு!
முன்பதிவு செய்த 4 மணி நேரத்தில் சமையல் கேஸ் சிலிண்டர் டெலிவரி: சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் புதிய திட்டம் தொடக்கம்!