சென்னையில் உள்ள பெரியமேடு, பெரியண்ண மேஸ்திரி தெருவில் இருக்கும் வீட்டில், வடமாநில இளைஞர்கள் சந்தேகத்துக்கு இடமான வகையில் அதிகம் வந்து செல்வதாக விபச்சார தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரியவந்தது. இதனையடுத்து, பொறுப்பு காவல் ஆய்வாளர் ஜெயவனிதா தலைமையிலான அதிகாரிகள் நேரில் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, குறிப்பிட்ட வீட்டுக்குள் சந்தேகத்துக்கு இடமான வகையில் பல இளைஞர்கள் வந்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, அந்த வீட்டுக்குள் அதிரடியாக சென்ற காவல்துறையினர் சோதனை செய்தனர். அப்போது, உத்திரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த விக்கி ஷைனி (வயது 33), தெலுங்கானா மாநிலம் ஹைத்ராபாத்தைச் சேர்ந்த ராகேஷ் ஷென் (வயது 31) ஆகியோர் தரகர்கள் என்பது அம்பலமானது.
இவர்கள் இருவரையும் கைது செய்து நடந்த விசாரணையில், பெரியமேடு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து, வடமாநில தொழிலாளர்களை ஒருங்கிணைத்து வாட்ஸப்பில் விபச்சாரம் நடத்தி வந்தது அம்பலமானது. வாட்ஸப்பில் இளம்பெண்களின் புகைப்படத்தை பகிர்ந்து பாலியல் தொழிலை நடத்தி வந்துள்ளனர். இதனையடுத்து, இருவரையும் கைது செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.

More Stories
போதையில் தாறுமாறாக காரை ஓட்டி விபத்து: தவெக பிரமுகருக்கு சரமாரியாக அடி-உதை…
பொள்ளாச்சியை மிஞ்சும் சேலம் கொடூரம்… சிக்கிய வீடியோ ஆதாரங்கள்.!
22 பக்கக் கடிதம் எழுதிட்டு அரசுப் பள்ளி எச்.எம் செய்த கொடூரம்…