தாம்பரம் பகுதியில் இருந்து பெருங்களத்தூர் நோக்கி நேற்றிரவு சொகுசு கார் ஒன்று அதிவேகமாக தாறுமாறாக சென்றது. வழியில் சில வாகனங்கள் மீது மோதியது. அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள், விரட்டி சென்று பெருங்களத்தூர் அருகே மடக்கி பிடித்தனர். பின்னர், காரில் இருந்த ஓட்டுநரை கீழே இறக்கினர். அவரால் நிற்கக்கூட முடியவில்லை. அந்தளவுக்கு மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. அவரது சட்டையில் தவெக சின்னம் பதிக்கப்பட்ட பேட்ஜ் இருந்ததால் தவெக நிர்வாகி என்பதை பொதுமக்கள் உறுதி செய்தனர். இந்த சம்பவத்தை பொதுமக்கள் வீடியோவாக பதிவு செய்தனர்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையில் அவரது நண்பர்கள் விரைந்து வந்து போதையில் இருந்த தவெக நிர்வாகியையும், காரையும் எடுத்து கொண்டு சென்றனர். இதையடுத்து வந்த போலீசார், அவரது நண்பர்களிடம் விசாரித்து மது போதையில் இருந்த நபரையும், காரையும் கொண்டு வரவேண்டும் என எச்சரித்தனர். பின்னர், பைக்கில் அழைத்து வரப்பட்ட அந்த நபர், தள்ளாடியபடி நின்றிருந்தார். போலீசாரின் விசாரணையில், அவர், பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பதும், தவெகவில் எந்த பொறுப்பிலும் இல்லாததும் தெரியவந்தது.
அவரை கடுமையாக எச்சரித்ததுடன் தவெக சின்னம் வைத்திருந்த பேட்ஜை அகற்றுமாறு அறிவுறுத்தினர். மேலும் விபத்து ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

More Stories
வாட்சப்பில் போட்டோ அனுப்பி ஹைடெக் விபசாரம்…
பொள்ளாச்சியை மிஞ்சும் சேலம் கொடூரம்… சிக்கிய வீடியோ ஆதாரங்கள்.!
22 பக்கக் கடிதம் எழுதிட்டு அரசுப் பள்ளி எச்.எம் செய்த கொடூரம்…