April 22, 2026

3 பிளைட்.. 48 மணி நேரம் டிராவல்! ஜெர்மனி டூ சென்னை! ஓட்டு போட ஓடி வந்த பாட்டி!

சென்னையில் வசிக்கும் வெளியூர் மக்கள், ஓட்டு போட சொந்த ஊர் போவதை போல.. வெளிநாடுகளிலிருந்தும் மக்கள் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர். தமிழக சட்டமன்றத்தின் பதவிக்காலம், மே-10ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த முறை விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் களத்தில் இறங்கியிருக்கிறது. எனவே தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது.

பரப்புரைகள் நேற்று மாலை ஓய்ந்த நிலையில், பரப்புரைக்கு பிந்தைய தேர்தல் விதிகள் நடைமுறைக்கு வந்திருக்கின்றன. நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதால், மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு பயணிக்க தொடங்கயிருக்கின்றனர். சென்னையிலிருந்து உள் மாவட்டங்களுக்கு மக்கள் செல்ல சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. நேற்றிவு தொடங்கி சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதி வருகிறது. அதேபோல எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களிலும் பயணிகள் அதிக அளவில் குவிந்துள்ளனர்.

மறுபுறம் வாக்களிப்பதற்காக வெளிநாடுகளில் வேலை செய்யும் தமிழர்கள் சொந்த ஊர் வந்திருக்கிறார்கள். குறிப்பாக ஜெர்மனியிலிருந்து 3 விமானங்கள் மாறி, சுமார் 48 மணி நேரம் பயணித்து மூதாட்டி ஒருவர், தனது குடும்பத்துடன் வாக்களிக்க சென்னை வந்திருக்கிறார். இது சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது.