April 27, 2026

மாணவர் சேர்க்கை அரசு பள்ளிகளில் 1 லட்சத்தை கடந்தது: தமிழக அரசு அறிவிப்பு…

அரசு பள்ளிகளில் தொடர்ந்து மாணவர் சேர்க்கை குறைவாக இருந்து வருகிறது மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மார்ச் ஒன்றாம் தேதி முதல் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் எனவும் அதற்காக விழிப்புணர்வு பேரணியில் நடத்தப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்திருந்தது.

மேலும், மாணவர் சேர்க்கை குறித்த துண்டு பிரச்சாரங்கள் வழங்கியும் அரசின் நலத்திட்டங்களை எடுத்துக் கூறியும் சேர்க்கை நடத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. 

அரசு பள்ளியில் உள்ள சலுகைகள்: அரசு பள்ளியில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரசு பணியில் 20 சதவீதம் முன்னுரிமை, 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி பயில 7.5 சதவீதம் முன்னுரிமை, பெண் கல்வி இடைநிற்றலைத் தவிர்க்க அரசுப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு உயர் கல்வி பயில மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது.

பள்ளிக் கல்வியில் தொழில்நுட்ப விரிவாக்கம் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதலுடன் சேர்த்து எண்ணிய தொழில்நுட்ப விரிவாக்கத்தை (Digital Technology) முன்னெடுப்பு நிகழ்வாகத் தற்போது தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை டிஜிட்டல் முறையில் தகவல்களைப் பெற ஏதுவாக 3 ஆயிரத்து 90 அரசு உயர்நிலைப் பள்ளிகளில், பள்ளிக்கு 10 கணினிகளும், 2 ஆயிரத்து 939 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 20 கணினிகளும் என மொத்தம் 6 ஆயிரத்து 29 பள்ளிகளுக்கு 5 அல்லது 6 Mbps வேகம் கொண்ட அகண்ட அலை வரிசைக் கற்றல் வசதி அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நடப்பாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை அரசு பள்ளிகளில் 1 லட்சத்தை கடந்தது. தமிழகத்தில் அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்தது. தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 2026-27ஆம் கல்வி ஆண்டுக்கு 1ஆம் வகுப்புகளில் 97,737 பேர் சேர்ந்துள்ளனர்; 2 முதல் 8ஆம் வகுப்பு வரை 8,178 பேர், மழலையர் வகுப்புகளில் 6,796 மாணவர்கள் என மொத்தம் 1,12,711 பேர் சேர்ந்துள்ளனர்.