மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே, வெளிநாடு வாழ் இந்தியரின் வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் தங்க நகைகள், 6 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பொதும்பு வானவில் சிட்டி பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரினோ மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில், அவர் தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்றிருந்தார். வீட்டில் ஆளில்லாததை நோட்டமிட்ட கொள்ளையர்கள், நள்ளிரவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 100 சவரன் தங்க நகைகள், 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள், செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். சிக்காமல் இருக்க வீட்டின் சிசிடிவி ஹார்டு டிஸ்க் ஆகியவற்றையும் காரில் திருடிச் சென்றனர்
மேலும், அதே பகுதியில் அருகிலுள்ள மற்றொரு வீட்டின் பூட்டை உடைத்தும் வெள்ளிப் பொருட்களை அந்த மர்ம கும்பல் கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது. தகவலறிந்த காவல்துறையினர் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தடயங்களைச் சேகரித்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

More Stories
சாட்சியத்தை மட்டும் வைத்து மரண தண்டனை வழங்க முடியாது: போக்சோ வழக்கில் கைதானவரை விடுதலை செய்து மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!
5 தொகுதிகளில் இடைத்தேர்தல் தள்ளிப்போவது ஏன்? நீதிமன்ற வழக்குகள் குறித்து வெளியான தகவல்
மதநல்லிணக்க கந்தூரி விழா: அனைத்து சமூக குடும்பங்களுக்கும் வாளிகளில் நெய்ச்சோறு, கறிக்குழம்பு வழங்கி நெகிழ்ச்சி!