சென்னை திருவான்மியூர், சித்திரை குளத் தெருவில் ஒரு வீட்டுக்குள் வணிக மற்றும் வீட்டு பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்வதாக நேற்று மாலை திருவான்மியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதுகுறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று, குறிப்பிட்ட வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அந்த வீட்டுக்குள் வணிக மற்றும் வீட்டு பயன்பாட்டுக்கான 40 காஸ் சிலிண்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதை போலீசார் கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து, அந்த வீட்டில் வணிக மற்றும் வீட்டு காஸ் சிலிண்டர்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட நீலமேகம் (80), அவரது மகன் குமார் (41) ஆகிய இருவரையும் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் இருவரும் காஸ் சிலிண்டர்களை வீட்டுக்குள் பதுக்கி வைத்து, வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்களை ரூ.3 ஆயிரத்துக்கும், வணிக பயன்பாட்டு காஸ் சிலிண்டர்களை ரூ.6 முதல் ரூ.7 ஆயிரத்துக்கும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளனர் எனத் தெரியவந்தது.
http://jionewstamil.com/2-people-broke-in-and-stole-jewelry/

More Stories
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு அதிகாரப்பூர்வ விளக்கத்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டனர் !
பொதுமக்கள் மீது வெடிகுண்டு வீச்சு: தஞ்சை, பந்தலூரில் பரபரப்பு — 7 பேர் கைது
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்