September 10, 2026

ஐ.டி.நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து!!

சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த காரப்பாக்கத்தில் உள்ள பிரபல ஐ.டி.நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தை அடுத்து ஐ.டி. ஊழியர்களை வெளியேற்றும். ஐடி நிறுவனத்தில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையின் முக்கிய தகவல் தொழில்நுட்ப மையங்களில் ஒன்றாக விளங்கும் ஓஎம்ஆர் சோழிங்கநல்லூர் – காரப்பாக்கம் பகுதியில் உள்ள டெக் மகேந்திரா நிறுவன வளாகத்தில் உள்ள கிடங்கில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரப்பாக்கம் எல்காட் வளாகத்தின் பின்புற பகுதியில் உள்ள கிடங்கு பகுதியில் திடீரென தீப்பற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட சில நிமிடங்களிலேயே கரும்புகை வானத்தை மூடும் அளவுக்கு பரவியதால், அப்பகுதியில் இருந்த ஐடி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்தச் சம்பவம் உள்ளூர் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எல்காட் (ELCOT) சென்னைக்கு பின்புறம் அமைந்துள்ள டெக் மகேந்திரா நிறுவன வளாகத்தில்தான் இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தீ பற்றிய தகவல் வெளியானதிலிருந்து அங்கு இருந்தவர்கள் பலர் அதன் தீவிரத்தைக் கண்டு பயந்து போனதாகக் கூறுகின்றனர். இந்த தீ விபத்தை 15 நிமிடங்களுக்கு மேல் பார்த்துக் கொண்டிருக்கிறேன். சுமார் தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணிகளில் ஈடுப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளனர். சமுக வலைத்தளத்தில் பல வீடியோக்கள் வெளியாகி வருகிறது.

You may have missed