சட்டப்பேரைவையில் சபாநாயகருக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவாக செயல்பட வலியுறுத்தி ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் படி, பிரபல யூடியூபரும், தேர்தல் கருத்துகணிப்பு நிபுணருமான திருநாவுக்கரசு உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி தவெக எம்எல்ஏ இளையராஜா, கடந்த 29ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் புகார் ஒன்று அளித்தார். அதில், சில தினங்களுக்கு முன்பு என்னை செல்போனில் தொடர்பு கொண்ட திருநாவுக்கரசு என்பவர், ஐபிடிஎஸ் என்ற கருத்து கணிப்பு நிறுவனம் நடத்தி வருவதாகவும், ஒரு முக்கிய கட்சியை சேர்ந்த சிலர் கேட்டுக் கொண்டதன் பேரில் தொடர்பு கொள்வதாகவும், நேரில் சந்திக்க வேண்டும் என்றும் பேசினார்.
ஆனால் நான் வேறு பணியில் இருப்பதாக கூறி இணைப்பை துண்டித்துவிட்டேன். ஆனால் மீண்டும் தொடர்பு கொண்ட திருநாவுக்கரசு, தமிழ்நாடு சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் கொண்டு வர உள்ளதாகவும், ஆளுங்கட்சி உறுப்பினராக இருந்தாலும் அத்தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின் போது, நாங்கள் சொல்வது போல் நடந்து கொள்ள வேண்டும் என்றும், அதற்கு சன்மானமாக ரூ.35 கோடி வரை தருவதாக ஆசை வார்த்தை காட்டினார்.

More Stories
பல்லாவரம்: நள்ளிரவில் அத்துமீறிய மாமனாரை வெட்டி கொலை செய்த மருமகள்…
செய்தி மக்கள் தொடர்புத் துறை: 8 உதவி அலுவலர்களுக்கு மக்கள் தொடர்பு அலுவலர்களாகப் பதவி உயர்வு!
பவுடர்’ வீடியோ: “கொன்றுவிடுவோம் என மிரட்டுகிறார்கள்” – பள்ளி நண்பர் பரபர புகார்…