தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 4,023 பேர் போட்டியிடும் நிலையில் 3,992 பேரின் பிரமாணப்பத்திரங்களை ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான சங்கமும் தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பும் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.அதன்படி 722 பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள் என்றும் 404 பேர் தீவிரமான குற்றப் பின்னணி கொண்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டுத் தேர்தலுடன் ஒப்பிடும்போது, குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களின் எண்ணிக்கை 13%-லிருந்து 18%-ஆக அதிகரித்துள்ளது கட்சி வாரியாக பார்க்கும் போது அதிகபட்சமாக அதிமுக வேட்பாளர்கள் அதிக அளவில் குற்றப்பின்னணி உடையவர்களாக இருக்கின்றனர்.
கடுமையான குற்றங்களைப் பொறுத்தவரை, 13 பேர் மீது கொலை வழக்கும், 44 பேர் மீது கொலை முயற்சி வழக்கும், 18 பேர் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளும் உள்ளன. நிதி நிலைமையை பொருத்தவரையில் தமிழக தேர்தலில் 981 கோடீஸ்வர வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதிலும் 22 பேர் 100 கோடிக்கும் மேல் சொத்து வைத்துள்ளனர்.

More Stories
பாஜக பெண் நிர்வாகி புகார்.. திருச்சி சூர்யா கைது.. முக்தாருக்கு வலைவீச்சு!
அதிக மக்களை இணைக்கும் ஒரு புதிய அரசியல் இயக்கம்: அண்ணாமலை அறிவிப்பு…
என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” – தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு…