விருதுநகர் மாவட்டம் வச்சகாரப்பட்டி அருகே தனியாருக்கு சொந்தமான வனஜா பட்டாசு ஆலை செய்யப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமையான இன்று அந்த ஆலையில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்தசூழலில் தான், இன்று பிற்பகலில் எதிர்பாராத விதமாக வெடிவிபத்து ஏற்பட்டிருக்கிறது.தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். முதலில், 4 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரித்திருக்கிறது. 6 பேர் மருத்துவமனையில், சிகிச்சைபெற்று வருகின்றனர். மேலும், பட்டாசு ஆலையில் உள்ள 4 அறைகள் முற்றிலும் சேதமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தொடர்ந்து, மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தான், அதே இடத்தில் மீண்டும் வெடி விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதனால், மீட்புபணி வீரர்கள் 8 காயமடைந்திருக்கின்றனர். அடுத்தடுத்த, வெடிவிபத்துக்களால மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது.

More Stories
காங்கேயம்: திமுக ஆட்சியில் வளர்ச்சி முடக்கம் எஸ்.பி.வேலுமணி அனல் பறக்கும் பிரச்சாரம்!
தூத்துக்குடியில் பரபரப்பு: திமுக பிரமுகரிடம் ரூ. 35 லட்சம் பறிமுதல்
கடல் அடியில்வாக்குப்பதிவு விழிப்புணர்வு: ராமநாதபுரத்தில் வியக்க வைத்த நூதன முயற்சி!