ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள மலை கிராமத்தைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவியை ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்து கர்ப்பமாக்கியதாக 2 பேர் மீது மாணவியின் பெற்றோர் சத்தியமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட மலை கிராமத்தைச் சேர்ந்த சுந்தரம் என்பவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், அதே கிராமத்தை சேர்ந்த திருமணமான யுவராஜ்(26) என்பவர் மீதும் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் போதிய ஆதாரம் இல்லாததால் போலீசார் உடனடியாக வழக்கு பதிவு செய்யவில்லை. இந்நிலையில், கல்லூரி மாணவிக்கு குழந்தை பிறந்ததால் மாணவி, குழந்தை மற்றும் யுவராஜ் ஆகியோரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. பரிசோதனை முடிவில் மாணவியுடன் உல்லாசம் அனுபவித்து குழந்தைக்கு தந்தையானது யுவராஜ் என்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து மகளிர் போலீசார் யுவராஜ் மீது போக்சோ வழக்கு பதிந்து யுவராஜை கைது செய்தனர். அவர் தவெகவில் சத்தியமங்கலம் கிழக்கு ஒன்றிய துணைச்செயலாளர் பொறுப்பில் உள்ளது தெரியவந்தது. மேலும் இவர் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர் மற்றும் எம்எல்ஏ உடன் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டுள்ளார். தவெக நிர்வாகி டிஎன்ஏ பரிசோதனை அடிப்படையில் போக்சோ வழக்கில் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More Stories
திருமலை: மனைவி, குழந்தைகள் உள்பட 6 பேரை வெட்டிக் கொன்ற சைக்கோ….
தூத்துக்குடி: தனித் தனியாக வந்த அமைச்சர்கள்! முத்துக்கோன் விழாவில் முற்றிய மோதல்!
அதிமுகவில் 6 எம்.எல்.ஏக்கள் அவுட்…. சசிகலா நடத்தும் ரகசிய டீலிங்! எடப்பாடி விடுத்த எச்சரிக்கை!!!